குரூப் 2 தேர்வு விடை தாள் வெளியாகும் தேதி அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 12, 2018

குரூப் 2 தேர்வு விடை தாள் வெளியாகும் தேதி அறிவிப்பு!





தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் 1,199 காலிப்பணியிடங் களை நிரப்ப நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல் நிலைத் தேர்வைசுமார் 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகிறது.நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்ன டத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பதவிகளில் 1,199 காலியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கியது.பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வுக்கு 6 லட்சத்து 26,970 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.அவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 72,569 பேர். பெண்கள் 3 லட்சத்து 54,291 பேர். 10 பேர் மூன்றாவது பாலினத்தவர். பார்வையற்றவர்கள் 1001 பேர். பொதுத்தமிழ் பாடத்தை 4 லட்சத்து 81 ஆயிரத்து 80 பேரும்பொது ஆங்கிலம் பாடத்தை 1 லட்சத்து 45,890 பேரும் தேர்வுசெய்தனர்.2,268 மையங்களில்தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் சுமார் 6 லட்சம்பேர் தேர்வு எழுதினர். தேர்வுப்பணியில் 31,349 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னையில் 247 இடங்களில், 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். ராஜா அண்ணா மலைபுரம் ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் ஆய்வுசெய்தார்.தேர்வை முன்னிட்டு மாநகர போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத்தேர்வுக்கு தகுதிபெறுவர். ‘ஒரு காலியிடத் துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 12 ஆயிரம் பேர் முதன்மைத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஒரே கட் ஆப் மதிப்பெண்பெற்றிருந்தால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கக்கூடும்.அதில் வெற்றிபெறுவோருக்கு நேர்முக் தேர்வு நடத்தப்படும். இறுதியாக முதன்மைத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிகளுக்கு தேர்வு செய்யப்படு வார்கள்.தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

முதன்மைத் தேர்வானது மே மாதம் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். செப்டம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு அக்டோ பரில் நேர்முகத் தேர்வும் அதைத்தொடர்ந்து நவம்பரில் பணி ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.

Post Top Ad