School Morning Prayer Activities - 31.10.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 31, 2018

School Morning Prayer Activities - 31.10.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

உரை:

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

பழமொழி :

Delay of justice is injustice

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்

பொன்மொழி:

ஒருவன் என்றைக்கு
சிரிக்காமலே
இருக்கிறானோ,
அந்த நாள் தொலைந்து
போன நாளே.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1..எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?
1908

2.கலைவாணர் பிறந்த ஊர்?
ஒழுகினசேரி

நீதிக்கதை

சேவலும் இரத்தினக் கல்லும்



அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.

அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.

அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.

நீதி: ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.


இன்றைய செய்தி துளிகள்:


1.எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் மாதத்திற்கு ரூ. 20,000 மட்டுமே எடுக்கும் முறை இன்று முதல் அமல்

2.புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

3.தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்மட்டுமே அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது!

4.பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பு துவக்கம்!

5.5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பார்முலா 1 கார் பந்தயத்தில் லூயிஸ் ஹாமில்டன் அசத்தல்

Post Top Ad