பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 22, 2018

பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு




சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, பள்ளிகள் தரப்பில் போலி ஆவணங்கள் கொடுத்து, அங்கீகாரம் பெற்று விடுவதாக, புகார்கள் எழுந்தன.அதேபோல, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் ஆகியவற்றிலும், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகம் ஆலோசனைநடத்தி, புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட்டது.

இதன்படி, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்குவதில், ஒவ்வொரு மாநில அரசுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை, அக்., 18ல், மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வெளியிட்டார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அங்கீகார இணைப்பை பெறுவதற்கான, புதிய விதிகள் சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.இதில்,

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை களின் தரம், கல்வி தரம், பின்பற்ற வேண்டிய புத்தகம், மாணவர்களை சேர்க்கும் முறை, கட்டண விதிகள், பள்ளிக்கு தேவையான நில அளவு,சான்றிதழ் பெற வேண்டிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தி லும், மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.இந்த விதிப்படியே, இனி அனைத்து பள்ளிகளுக்கும் புதிய இணைப்பும், அங்கீகார நீட்டிப்பும் வழங்கப்படும்.

மேலும், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

Post Top Ad