சமைக்கும் பணிகளில் ஆசிரியர்கள் - சங்கங்கள் எதிர்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 29, 2018

சமைக்கும் பணிகளில் ஆசிரியர்கள் - சங்கங்கள் எதிர்ப்பு


சத்துணவு ஊழியர்கள் ஏழுஅம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி இன்று  முதல்காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். இதனால் 43ஆயிரம் சத்துணவுமையங்கள் ஸ்தம்பிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

சத்துணவு ஊழியர்கள்,வரையறுக்கப்பட்டகுறைந்தப்பட்ச ஊதியம்,குடும்ப பாதுகாப்புடன்கூடிய ஓய்வூதியம்,பணிக்கொடை, உணவுதயாரிப்பு செலவைஉயர்த்துதல் உள்பட ஒன்பதுஅம்ச கோரிக்கைகளைநிறைவேற்ற வலியுறுத்திஅக்டோபர் 25 முதல்காலவரையற்றகாத்திருப்புப்போராட்டத்தை துவக்கினர்.இதில், அக்.,25, 26, 27 மூன்றுநாட்கள் சத்துணவு ஊழியர்கள் குழந்தைகளுக்கு சமைக்கும் பணியை கவனித்தவாறே போராட்டத்திலும் பங்கேற்றனர். 

தேனிமாவட்ட தலைவர்நிலவழகன் கூறுகையில், ''இன்று, அக்.,29 முதல்வேலை நிறுத்தத்தில்ஈடுபட முடிவுசெய்துள்ளோம்.

இதனால் மாநிலத்தில்உள்ள 43 ஆயிரம் சத்துணவுமைய குழந்தைகளுக்குஉணவு சமைக்கும் பணிஸ்தம்பிக்கும் நிலைஉருவாகியுள்ளது.,''என்றார்.

ஆசிரியர்கள் எதிர்ப்பு 

இதையடுத்து தமிழக அரசு 25மாணவர்களுக்கு குறைவாக உள்ளமையங்களுக்கு ஓராசிரியர், மற்றமையங்களில் ஒருதலைமை ஆசிரியர், ஆசிரியர் என சமைக்கும்பணிகளில் ஈடுபட அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் கடுமையானஎதிர்ப்பு கிளம்பியுள்ளது

Post Top Ad