மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா எடுத்த ஆரியூர் ஊர்ப்பொதுமக்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 26, 2018

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா எடுத்த ஆரியூர் ஊர்ப்பொதுமக்கள்





அன்னவாசல்,அக்.26: ஆசிரியர் தினவிழாவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆரியூர் பள்ளி தலைமையாசிரியருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா எடுத்து அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ஆரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமைஆசிரியர் அ. பிலீப் வரவேற்றுப் பேசினார்..

விழாவினை குத்துவிளக்கேற்றி அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் அரு.பொன்னழகு பேசியதாவது: ஆசிரியர் தினவிழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்று அன்னவாசல் ஒன்றியத்திற்கும் ஆரியூர் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த தலைமை ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.நல்லாசிரியர்கள் என்பவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உழைப்பது போல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உழைக்க வேண்டும்..ஓர் அரசுப்பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் எனில் ஊர்ப்பொதுமக்கள்,முக்கிய பிரமுகர்கள்,கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்..பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் மட்டும் போதாது. பள்ளியின் மேல் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படிக்க, நன்கு வளர பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பது மட்டும் போதாது ..நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர்களாகிய நீங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்..மேலும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி உயர வேண்டும் எனில் பெற்றோர்களாகிய நீங்கள் நினைத்தால் மட்டுமே முடியும் என்றார்..
விழா குறித்து பள்ளி தலைமையாசிரியர் அ.பிலீப் கூறியதாவது: நான் இப்பள்ளியில் பணியேற்று 11 ஆண்டுகள் ஆகிறது..நான் பணியேற்ற நாள் முதல் இன்று வரை சமுதாய பங்களிப்புடனும் என்னுடைய சொந்த பங்களிப்புடனும் பள்ளியை உயர்த்த பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றியுள்ளேன்..என்னுடைய நோக்கம் என்னவென்றால் இவ்வூர் பள்ளி,கோவில்,கிராமம் ஆகியவற்றை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பதே..அதனால் தான் மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் ஏற்படும் வகையில் பள்ளியைச் சுற்றி 300 மரங்களை நட்டு பராமரித்து வருகிறேன்..இது போன்ற சூழலில் அவன் படிக்கும் பொழுது அவன் தன்னார்வமாக செயல்பட்டு தனது கிராமத்தில் மரம் நட்டு வளர்க்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வான் என்றார்..இன்று ஊர்ப்பொதுமக்கள் சார்பில் எனக்கு பாராட்டு விழா எடுத்ததும் தூய்மையான கிராமமாக மாற்ற உறுதிமொழி எடுத்ததும் என் மனதிற்கு மகிழ்வாக உள்ளது என்றார்.

ஊர்ப்பொதுமக்கள் சார்பில் விழாவில் சத்தியபாப்பு பேசியதாவது: எங்கள் ஊர் அரசு பள்ளி ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர் விருது கிடைத்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.உடனே பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் நடைபெற்ற கூட்டத்திலே நம் பள்ளி தலைமை பாராட்டு விழா, கிராமத்தை தூய்மையான கிராமமாக மாற்ற உறுதிமொழி எடுக்கும் விழா,மரம் நடுவிழா என முப்பெரும் விழா எடுக்க தீர்மானித்தோம்..அதனடிப்படையில் இன்று கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளித் தலைமையாசிரியருக்கு சிறப்பு செய்தது மகிழ்வாக உள்ளது...அவர் பள்ளி வளர்ச்சி மட்டுமல்லாமல் கிராம வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை உள்ளவர் என்றார் பூரிப்போடு..

விழாவில் அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன், அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பிரசன்னா வெங்கடேஷ்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு ,அகில் இந்திய மகாத்மாகாந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் வைர.ந.தினகரன், கூடலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அ.செபாஸ்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்...

முன்னதாக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் தமிழையும் தமிழ்மண்ணையும் நேசிக்கும் நான் எனது பள்ளியை,எனது கிராமத்தை தூய்மை கிராமமாகவும் நமது தமிழ்நாட்டை தூய்மை தமிழகமாகவும் மாற்றிட நான் என்றென்றும் முயற்சி செய்வேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பள்ளி வளாகத்தை தூய்மைப் படுத்தும் பணியை அன்னவாசல் வட்டாரகல்வி அலுவலர் அரு.பொன்னழகு தானே முன்னின்று தொடங்கி வைத்து சிறப்பு விருந்தினர்கள், ஊர்ப்பொதுமக்கள் அனைவரையும் தூய்மைப் பணியில் ஈடுபட செய்து பள்ளி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டார்..

பின்னர் ஆரியூர் பள்ளி தலைமை ஆசிரியர் அ.பிலீப்புக்கு ஊர்ப்பொதுமக்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கியும் பொன்னாடைகள் போர்த்தியும் சிறப்பு செய்தனர்..

விழாவில் வட்டார வளமைய பயிற்றுநர்கள் கண்ணன்,ரெத்தினசபாபதி,ஓய்வு பெற்ற மாங்குடி பள்ளி தலைமையாசிரியர் கண்ணன்,மற்றும் பெருஞ்சுனை தலைமைஆசிரியை புனிதாமேரி,மாங்குடி தலைமை ஆசிரியை மஞ்சுளா,தலைமைஆசிரியர்கள் கண்ணன், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்..

முடிவில் ஆரியூர் பள்ளி இடைநிலை ஆசிரியை மதுரம் நன்றி கூறினார்..

Post Top Ad