நாளை அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் - கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 18, 2018

நாளை அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் - கல்வித்துறை






டிசம்பர் மாதம் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி நதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புனித நீராடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் இணையதள வசதியுடன் அறிவியல் லேப் வசதி செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ரூ.20 லட்சம் மதிப்பில் 672 மையங்களில் டிசம்பர் இறுதிக்குள் அறிவியல் லேப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவியல் லேப் கொண்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறை

விஜயதசமி நாளான நாளை, அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளை திறந்து, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Post Top Ad