தினமும் 3 நிமிடம் இப்படி செய்யுங்கள்: இரத்த ஓட்டம் சீராகும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 17, 2018

தினமும் 3 நிமிடம் இப்படி செய்யுங்கள்: இரத்த ஓட்டம் சீராகும்





காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.

இப்படி செய்கையில் உட்கார்ந்து எழும்போது காலில் உள்ள சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்

மேலும் தோப்புக்கரணம் போடுவதால் என்னென்ன பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.

தோப்புக்கரணம் போடுவது எப்படி?

முதலில் வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக் கொண்டு, இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொள்ளவேண்டும்.
பின் வலது கையை மடக்கி, இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் நேராக, உட்காரும் நிலையில் தோப்புக்கரணம் போட வேண்டும்.

தோப்புக்கரணம் போடுவதால் உடலில் ஏற்படும் மாற்றம்?

தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு நினைவாற்றல், ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.
உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது.
தோப்புக்கரணம் செய்வதால், மூளைக்கு ரத்தோட்டம் சீராகி, மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கி, உடலின் கை, கால்களின் தசைகள் வலிமையாகும்.
தோப்புக்கரணம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றி வந்தால், பெண்களின் பிரசவம் எளிதாகும். அதோடு அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
தோப்புக்கரணம் போடுவதால் இடுப்பு, மூட்டில் உள்ள ஜவ்வும் எலும்பு, தசைகள் வலுவடையசெய்து மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி வரமால் பாதுகாக்கிறது.
குறிப்பு

ஆரம்பத்தில் மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

Post Top Ad