2018ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 3, 2018

2018ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு




மூன்று பேருக்கு பரிசு

மூன்று பேருக்கு இந்த நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண்மணிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 50 வருடத்தில் முதல்முறை ஒரு பெண் வேதியியல் துறையில் இந்த விருதை பெறுகிறார். பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், சர் கிரகரி பி.வின்டர் ஆகியோருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.


பிரான்சஸ் எச்.அர்னால்ட்:-

அமெரிக்காவை சேர்ந்த பிரான்சஸ் எச்.அர்னால்ட் என்ற பெண் இந்த விருதை பெறுகிறார். நொதிகள் எனப்படும் என்ஜைம் ஆய்வுக்காகவும், அது எப்படி பரிமாணம் அடைகிறது என்று ஆய்வு செய்ததற்காகவும் இந்த பரிசு அளிக்கப்படுகிறது. இவர் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 50 சதவிகிதத்தை பெறுவார்.


சர் கிரிகோரி பி.வின்டர்:-

இங்கிலாந்தை சேர்ந்த வேதியியல் விஞ்ஞானி சர் கிரிகோரி பி.வின்டர் வைரஸ் குறித்து ஆய்வு செய்ததற்காக இந்த பரிசை பெறுகிறார். பேஜ் வைரஸ்களைப் பயன்படுத்தி புதிய மருந்துகள் தயாரிக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பெறுகிறார். இவர் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார்.

ஜார்ஜ் பி.ஸ்மித்:-

வேதியியல் விஞ்ஞானியான ஜார்ஜ் பி.ஸ்மித் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார். பேஜ் வைரஸ்களைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம் என்ற ஆய்வில் வெற்றி கண்டவர் ஜார்ஜ் ஸ்மித். அதற்காக இவருக்கும் நோபல் வலங்கடிப்புகிறது. பேஜ் வைரஸ் (பாக்டீரியோபேஜ்) என்பது நோய்களை உருவாக்கும் பாக்டீரியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் ஆகும்.

Post Top Ad