2-வது ஒருநாள் போட்டி : 205 இன்னிங்சில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் எடுத்து வீராட் கோலி சாதனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 24, 2018

2-வது ஒருநாள் போட்டி : 205 இன்னிங்சில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் எடுத்து வீராட் கோலி சாதனை







வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 81 ரன்களை கடந்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை வீராட் கோலி நிகழ்த்தி உள்ளார்.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது கோலி, இந்தாண்டில் 2000 ரன்களை கடந்து 5-வது முறையாக சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. இதில் இந்திய அணித்தலைவர் கோலி 140 ரன்கள் குவித்தார். ஒரு ஆண்டில் 2000 ரன்களை அடிப்பது ஒரு கிரிக்கெட் வீரர் சிறந்த வீரர் என்பதை வெளிப்படுத்தும். அந்த விதமாக கோலி 2012, 2014, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டில் 2000 ரன்களை கடந்திருந்தார். இந்நிலையில் (2018) இந்தாண்டும் 2000 ரன்களை கடந்து கோலி சாதித்துள்ளார்.


இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் 49வது அரை சதத்தை அடித்து சாதனை புரிந்து உள்ளார் வீராட் கோலி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 81 ரன்களை கடந்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாத்னையை வீராட் கோலி நிகழ்த்தி உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் விராட் கோலி. சச்சின் தெண்டுல்கரின் 1573 ரன்களை கடந்தார்.

இந்த போட்டியில் 81 ரன்களை கடந்ததன் மூலம் கோலி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வேகமாக 10 ஆயிரம் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். சச்சின் தெண்டுல்கள் இந்த சாதனை செய்ய அவருக்கு 259 இன்னிங்ஸ் தேவைபட்டது. ஆனால் கோலி 205 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

கங்குலி 263 இன்னிங்சிலும், பாண்டிங் 266 இன்னிங்சிலும், கல்லீஸ் 272 இன்னிங்சிலும், தோனி 273 இன்னிங்சிலும், லாரா 278 இன்னிங்சிலும் வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளனர். சந்திரபால் 10 ஆயிரம் ரன்களை கடந்த 10வது வீரர் ஆவார். இவர் 239 இன்னிங்சில் விளையாடி உள்ளார்.

ராகுல் டிராவிட் 10 வருடம் 317 நாட்களிலும், சச்சின் தெண்டுல்கர் 11 வருடம் 103 நாட்களிலும், குமார சங்ககார 11 வருடம் 217 நாட்களிலும் அடித்து உள்ளனர். வீராட் கோலி 10 வருடம் 64 நாட்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார்.

வீராட் கோலி 205
சச்சின் தெண்டுல்கர் 259
சவுரன் கங்குலி 263
ரிக்கி பாண்டிங் 266
ஜாக்குஸ் கல்லீஸ் 272
எம்.எஸ் தோனி 273
பிரைன் லாரா 278
ராகுல் டிராவிட் 287
திலகரத்னே தில்சான் 293
குமார சங்ககாரா 296
இன்சமாம் உல் ஹக் 299


போட்டிகள் - 213
இன்னிங்ஸ்- 205
பந்துகள்- 10813
50 ரன்கள் - 49
சதம் - 36
சராசரி - 59
ஸ்டைக்ரேட் - 92
அதிகபட்ச ஸ்கோர் - 183

Post Top Ad