Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் புகைப்படம் நமது www.asiriyar.net வலைத்தளத்தில் தற்காலிகமாக மறைக்கப்பட்டுள்ளது Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

Today Rasipalan 25.9.2018


*மேஷம்:*

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள். 

*ரிஷபம்:* 

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

*மிதுனம்:* 


எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும்.உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைபகிர்ந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். முயற்சியால் முன்னேறும் நாள்.

*கடகம்:* 

குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

*சிம்மம்:* 

சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும்.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். 


*கன்னி:* 

உங்கள் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர் களின் ஆதரவுப் பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

*துலாம்:* 

எதிர்பாராத பண வரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

*விருச்சிகம்:* 

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்றுநிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


*தனுசு:* 

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள்.  உழைப்பால் உயரும் நாள். 

*மகரம்:* 

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துவாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

*கும்பம்:* 

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.செலவுகளைக் குறைப்பிர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறு வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


*மீனம்:* 

ராசிக்குள் சந்திரன்நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பா ருங்கள். லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்