இரண்டு ஏலியன் உலகத்தை கண்டறிந்த நாசா! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 26, 2018

இரண்டு ஏலியன் உலகத்தை கண்டறிந்த நாசா!





மென்சா நட்சத்திரகூட்டத்தில் உள்ள பிஐ மென்சா என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதைக்கு மிக அருகில்,பிஐ மென் சி என்ற முதல் ஏலியன் உலகம் கண்டறியப்பட்டுள்ளது. NASA’s TESS satellite scans more than 200,000 stars in a fraction of the universe for brief dips in brightness.

மென்சா நட்சத்திரகூட்டத்தில் உள்ள பிஐ மென்சா என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதைக்கு மிக அருகில்,பிஐ மென் சி என்ற முதல் ஏலியன் உலகம் கண்டறியப்பட்டுள்ளது. NASA’s TESS satellite scans more than 200,000 stars in a fraction of the universe for brief dips in brightness.

டிரான்ஸிசனங் எக்ஸோப்ளானெட் சர்வே சாட்டிலைட்(Transitioning Exoplanet Survey Satellite-TESS) அனுப்பப்பட்டு வெறும் ஐந்தே மாதங்களில், வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மென்சா நட்சத்திரகூட்டத்தில் உள்ள பிஐ மென்சா என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதைக்கு மிக அருகில்,பிஐ மென் சி என்ற முதல் ஏலியன் உலகம் கண்டறியப்பட்டுள்ளது.
ஏலியன்


இந்த ஏலியன் கிரகமும் அதன் பிரகாசமான நட்சத்திரமும் பூமியில் இருந்து சுமார் 60 ஒளியாண்டுகள், அதாவது 350,000,000,000,000 மைல்கள் (563,270,400,000,000 கிலோமீட்டர்) தொலைவில் இருக்கலாம் என நாசா கணக்கிட்டுள்ளது.

நாசா

இதுதொடர்பாக நாசா டெஸ் பதிவிட்டுள்ள டிவீட்டில், "நாசா டெஸ்ஸின் முதல் கிரகத்திற்கான வேடிக்கை குறிப்புகள்: இரவு வானத்தலில் புலப்படும் இந்த பிஐ மென்சா நட்சத்திரத்தின் நிறை மற்றும் சுற்றளவு, நீர் போன்ற அடர்த்தியைக் காண்பிக்கிறது மற்றும் இந்த அமைப்பை கொண்ட இரண்டாவது கிரகம் இது. மற்றொன்று வியாழனைப்போன்று 10மடங்கு நிறையுடன், 5.7 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது" தெரிவித்துள்ளது.

ரெட் டிவார்ப்

இரண்டாவது ஏலியன் உலகமானது,ரெட் டிவார்ப் நட்சத்திரத்திற்கு அருகில் பூமியில் இருந்து சுமார் 49 ஒளியாண்டுகள், அதாவது 288,000,000,000,000 மைல்கள் (436,000,000,000,000 கிலோமீட்டர்)தொலைவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கிரகமானது ஒப்பீட்டளவில் பூமியின் அளவை போன்றே இருந்தாலும், அதை விட சற்றே பெரியதாகவும், அதன் நட்சத்திரம் சுற்றி வரும் சுற்றுவட்டப்பாதை சற்று குறைவாகவும் உள்ளது.

நாசா டெஸ்

இது தொடர்பாக நாசா டெஸ் கூறியதாவது,

"பூமியை விட சற்றே பெரிதான இந்த கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையின் எல்.எச்.எஸ் 3844, எம் டிவார்ப் நட்சத்திரத்தில் இருந்து 49 ஒளியாண்டுகள் தொலைவில், ஒவ்வொரு 11 மணி நேரமும் சுற்றுவருகிறது, இந்த கண்டுபிடிப்புகள் மற்ற விஞ்ஞானிகளால் மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது மற்றும் இந்த' ஹாட் எர்த்'ஐ பற்றி ஆய்வை நடத்த எதிர்நோக்கியுள்ளோம்"

நிலப்பரப்பில் பாறை

ஆனால் துருதிஷ்டவசமாக இந்த கிரகத்தின் அதிக வெப்பநிலை காரணமாக, மேம்பட்ட வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியம் குறைவுதான்.


உயிர் வாழ்வதற்கு முக்கிய தேவையான தண்ணீர் இந்த பிஐ மென்சா கிரகத்தில் ஏராளமாக இருந்தாலும், அதில் பெருமளவை இழந்திருக்கலாம்.ஏனெனில் இக்கிரகத்தில் உள் ள வெப்பத்தால், தண்ணீர் ஆவியாகியிருக்கலாம் என்கிறார் இது பற்றி ஆய்வு நடத்திய எம்.ஐ.டியை சேர்ந்த செல்சியா.

செல்சியா மேலும் கூறுகையில்,நிலப்பரப்பில் பாறைகளை அதிகளவில் கொண்ட இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜனும் ஹீலியமும் அதிகளவில் உள்ளது.

Post Top Ad