உஷார்! இந்த உணவுகளை மட்டும் மறந்து கூட மீண்டும் சுட வைத்து சாப்பிடாதீர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 16, 2018

உஷார்! இந்த உணவுகளை மட்டும் மறந்து கூட மீண்டும் சுட வைத்து சாப்பிடாதீர்கள்




தமிழர்கள் உணவுப் பழக்கத்தில் ஏற்கனவே சமைத்து வைத்த பொருட்களை சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் சுட வைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. பல்வேறு உணவுப் பொருட்களை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மீண்டும் சுட வைத்து சாப்பிடவே கூடாத பொருட்கள் இருக்கின்றன.
1) முட்டை

முட்டை நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் ஒன்று. காலை, மாலை, இரவு என்று மூன்று வேலையும் நாம் முட்டையை எடுத்துக் கொள்கிறோம். வேக வைத்த முட்டையாக இருந்தாலும் சரி, ஆம்ப்லேட், ஆஃப்பாயில் போன்றவையாக இருந்தாலும் சரி மீண்டும் வேக வைத்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படுவது உறுதி.
2) எண்ணெய்

இந்திய வீடுகளில் மட்டும் அல்ல ஓட்டல்களிலும் கூட ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சுட வைத்து பயன்படுத்துவது வாடிக்கை. ஆனால் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை தொடர்ந்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது அதில் உள்ள வேதிப் பொருட்கள் மாற்றம் அடைந்து இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
3) உருளை கிழங்கு

உருளை கிழங்கு பிரியர்கள் ஏராளமானோர் உண்டு. உருளை கிழங்கை சிப்சாகவும், சாப்பாடிற்கும் சைடிஸ்ஸாகவும் பயன்படுத்துவது நமது வழக்கம். ஒரு முறை சமைத்து வைத்துவிட்டால் அப்படியே உருளை கிழங்கை சாப்பிட்டு முடிப்பது நல்லது. மீண்டும் ஒரு முறை சுட வைத்து சாப்பிட நினைத்தால் உருளை கிழங்கில் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
4) சிக்கன்

வீட்டில் செய்யப்படும் சிக்கனை மட்டும் இல்லாமல் ஹோட்டலில் வாங்கி வந்து மீதம் இருக்கும் சிக்கனை கூட மறுநாள் சூடு செய்து நாம் சாப்பிடுவது சரியான நடவடிக்கை இல்லை. ஏற்கனவே சிக்கன் நம் உடலுக்கு சூடு ஏற்படுத்தக்கூடியது. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் அதனை சுட வைத்து சாப்பிட்டால் நமக்கு தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
5) கீரை

பொதுவாக கீரை என்பது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியவை. ஆனால் கீரையை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கீரையை இரவு நேரத்தில் சாப்பிடுவது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அப்படி இருக்கையில் காலையில் சமைத்த கீரையை இரவில் சுட வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள நைட்ரேட்ஸ் – நைட்ரைட்சாக மாறும். இதனை சாப்பிடும் போது உடல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.

Post Top Ad