அரசுப் பள்ளிகளில் Slow Learners - க்கு சிறப்பு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை முடிவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 19, 2018

அரசுப் பள்ளிகளில் Slow Learners - க்கு சிறப்பு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை முடிவு!

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததையடுத்து, மெள்ளக் கற்கும் மாணவர்களுக்குத் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் சிறப்பு வகுப்புகள், திறனறி தேர்வுகள் உள்ளிட்ட பல முயற்சிகளை ஆசிரியர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும், மாணவர்களின் குடும்ப சூழல், அவர்களின் கற்கும் திறன் உள்ளிட்ட பல காரணங்களால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவில்லை. 

மெள்ளக் கற்கும் மாணவர்களின் திறனை அதிகரிக்கும் வகையில், மெள்ளக் கற்போருக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளிப்பதற்குத் தமிழக பள்ளி கல்வித்துறை  திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களைத் தமிழக கல்வித்துறை தேர்வு செய்துள்ளது.


ஒரு மாவட்டத்துக்கு 101 பள்ளிகள் வீதம் 1,010 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்காக ஆசிரியர்களுக்கு இரண்டு நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, புனித தோமையர் மலை ஆகிய கல்வி மாவட்டங்களில், தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளன. 

மேலும், சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் மூலம், ஐந்து கல்வி மாவட்டங்களிலும் மெள்ளக் கற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இடை நிற்றல், உயர் கல்வி பயில்வதற்குத் தயக்கம் தவிர்த்தல் எனப் பல குறைபாடுகள் களையப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post Top Ad