Mobile phone பாஸ்வேர்டை மறந்துவிட்டால்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 25, 2018

Mobile phone பாஸ்வேர்டை மறந்துவிட்டால்?




ஸ்மார்ட் போனில் "பேட்டர்ன்' போடாமல் பயன்படுத்துவர்கள் மிகக்குறைவு. அந்த அளவிற்கு ஏராளமான விவரங்களை சேமித்து வைக்கும் லாக்கராகவே இன்றைய ஸ்மார்ட் போன்கள் உருமாறி விட்டன.
மறதி என்பது மனித இயல்பு. சில நேரங்களில் பேட்டர்னை மறந்து பலர் தவிப்பதுண்டு. பேட்டர்னை போடாவிட்டால் செல்போனில் நுழையவே முடியாது என்பதால் அவர்களின் தவிப்பு நியாமானதுதான்.சரி எப்படி பேட்டர்ன் லாக்}கை திறப்பது என பார்ப்போம்:
சாதாரணமாக நாம் ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோர் உள்ளிட்ட எந்தவொரு அப்ளிகேஷனுக்கு நுழைய வேண்டுமென்றாலும் அதற்கு முதல் தேவை இ}மெயில் முகவரிதான். அந்த முகவரிதான் நமக்கு இப்போது கைகொடுக்கும்.
நாம் பேட்டர்னை மறந்து விட்ட பின்பு, 5 முறை தொடர்ந்து மாறி,மாறி தவறான பேட்டர்னை வரைந்தால் போதும், கீழே orgot password? என்ற கேள்வி கேட்கும். ஆம்(yes) என பதிலளித்தால் அடுத்த பக்கம் வரும். அதில் நமது இ}மெயில் முகவரி மற்றும் அதற்குரிய பாஸ்வேர்டைக் கொடுத்தால் போதும், நேரடியாக புதிய பேட்டர்ன் போடும் பக்கத்துக்கு சென்று விடலாம். அங்கு நமக்கு தேவையான புதிய பேட்டர்னை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த முறையில் நாம் கைபேசியில் சேமித்து வைத்திருக்கும் எந்தவொரு தகவலும் அழியாது (இது தயாரிப்புகளுக்கு ஏற்ப மாறுபடும்).
மற்றொரு முறையில் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் அழிந்து விடும். பரவாயில்லை என நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.முதலில் கைபேசியை ஆப் செய்து கொள்ளவும். பின் கைபேசியிலுள்ள வால்யூம் பட்டன், ஹோம் பட்டன், பவர் பட்டன் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் புதிதாக ஒரு திரை வரும் அதில் wipe data/factory reset என்ற மெனு வரும் அதை தேர்வு செய்தால் (பவர் பட்டன்) மற்றொரு திரை வரும். அதில் delete files அல்லது reboot (ஒவ்வொரு வகையான கைபேசிக்கும் ஒவ்வொரு விதமான மெனுக்கள் வரும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது நமது கைபேசி ரீ}பூட் செய்யப்பட்டு. ஹோம் திரை தோன்றும். இனி நாம் வழக்கம் போல் கைபேசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாம் சேமித்து வைத்திருந்தவை அழிந்திருக்கும்.
- வி.குமாரமுருகன்.

Post Top Ad