மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 24, 2018

மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு


அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது. 


இதையடுத்து தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை  குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. இதற்காக த னியாக குழு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளதாக ெதரிகிறது. மேற்கண்ட குழு கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ள நிலையில் தற்போது 500 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. 

எஸ்எஸ்ஏ சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கான செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் தமிழகத்துக்கு கிடைக்க  வேண்டிய நிதி நிறுத்திக் வைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து கொடுத்த பிறகே மத்திய அரசின் நிதி  கிடைக்கும் என்று தெரிகிறது. 

Post Top Ad