தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன : உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 26, 2018

தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன : உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து


தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குளறுபடி காரணமாக 196 கருணை மதிப்பெண்கள் வழங்கக்கோரி தொடரப்பட்ட மனுவின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் மனிந்தர் சிங், எந்த ஒரு பொதுத்தேர்வையும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில் தமிழக அரசு உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆனால் மனிந்தர் சிங்கின் இந்த வாதத்தை ஏற்க நீதிபதி நாகேஷ்வர ராவ் மறுத்துவிட்டார்.

பொதுவாக தமிழக அரசின் செயல்பாட்டை இவ்வாறு கூறுவதை தன்னால் ஏற்க இயலாது எனவும் அவர் தெரிவித்தார். தான் தமிழக அரசு வழக்குகளை நிறைய வாதாடியிருப்பதாகவும், தமிழகத்தின் கல்வி கொள்கைகள் தனக்கு நன்றாக தெரியுமென்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தமிழகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தால்தான் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் நீதிபதி நாகேஷ்வர ராவ் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரத்தை அக்டோபர் 9ம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Post Top Ad