குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 25, 2018

குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா?




அழுத்த சமையற்கலனில் சமைக்கும்போது நீராவியானது அதிக அழுத்தத்தில் குக்கருக்குள் அடைக்கப்படுகிறது, இந்த நீராவி அழுத்தம்தான் உணவை வேகச்செய்கிறது. உணவுடன் சேர்க்கப்படும் நீரானது வெப்பத்தால் கொதிக்க வைக்கப்பட்டு அந்த அழுத்தம் உணவு வேகும் வேகத்தை அதிகரிக்கிறது. இந்த முறையில் வெப்பமானது குக்கரிலிருந்து உணவிற்கு நீராவி மூலம் மாற்றப்படுகிறது.

குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா?


இதற்கான தெளிவான பதில் இன்னும் கண்டறிய படவில்லை என்பதே உண்மை. குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பது இன்றும் விவாதத்திற்குரிய ஒரு பொருளாகவே இருக்கிறது. சிலர் இதனை ஆரோக்கியமற்றது என்கிறார்கள் ஏனெனில் இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிக சூடேற்றுவதால் அவை நீராவியுடன் சென்றுவிடுகிறது. சிலருக்கு இது ஆரோக்கியமானதாகவே இருக்கிறது, ஏனெனில் இது உணவை விரைவில் சூடுபடுத்தி விடுவதால் உணவில் உள்ள சத்துக்கள் அதிலேயே இருக்கிறது.

வைட்டமின்களை தக்கவைக்கிறது

கொதிக்க வைப்பதுடன் ஒப்பிடும்போது ஸ்டீமிங் முறையில் சமைப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி இவை காய்கறிகளில் உள்ள சத்துக்களை அவற்றிலேயே தக்க வைக்கிறது. மற்ற முறைகளில் சமைக்கும்போது அதிலுள்ள சத்துக்கள் எளிதில் வெளியேறிவிடுகிறது.

உணவின் மீது தாக்கம்

ஒவ்வொரு உணவிற்கும் குக்கர் ஒவ்வொரு மாதிரி செயல்படுகிறது. அரிசியை வேகவைக்கும் போது இது நன்கு வேகவைக்கிறது, கொதிக்க வைப்பதோடு நீராவியில் வேகவைப்பது நன்கு வேகவைக்கப்படும். அதுவே தக்காளியை வேகவைக்கும் போது இது ஆரோக்கியமானதாக வேகவைக்கிறது. இறைச்சியை வேகவைக்கும் போது இது நன்கு வேகவைத்து எளிதில் செரிக்கும்படி செய்கிறது, மற்ற முறைகளை விட இது இறைச்சியை நன்கு வேகவைக்கிறது.

கெட்ட செய்தி என்னவெனில் மாவு பொருள்களை வேகவைக்கும் போது அக்ரிலாமைடு என்னும் வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது மிகவும் ஆபத்தான பொருளாகும். இதனை தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் குக்கரில் சமைப்பது உங்கள் உணவில் உள்ள லெக்டினை அழிக்கிறது. லெக்டின் என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனம் ஆகும், இது உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்புகளை குறைப்பதன் மூலம் தாதுக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

சமைக்கும் நேரத்தை குறைக்கிறது

குக்கரில் சமைப்பது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குக்கரில் சமைக்கும் நேரம் உங்களுக்கு இதர வேலைகளுக்கான நேரமாகவோ அல்லது உங்கள் ஓய்வு நேரமாகவோ இருக்கும். இதில் சமைக்கும் போது ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

குக்கரை உபயோகிக்கலாமா அல்லது கூடாதா நீங்கள் குக்கரில் சமைத்த உணவின் சுவையை விரும்பினாலோ அல்லது உங்களுக்கு நீண்ட நேரம் சமைப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலோ, குக்கரில் சமைப்பதே உங்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால், உங்களுக்கு சமைக்க நிறைய முறைகள் இருக்கின்றன.

மற்ற சமைக்கும் முறைகளை போலவே குக்கரில் சமைப்பதிலும் சில நிறைகளும், குறைகளும் உள்ளது. எப்பொழுதும் புதுப்புது சமைக்கும் முறைகளையும், உணவுகளையும் முயற்சித்து கொண்டே இருங்கள். எனவே உங்கள் உடம்பு அனைத்து மாற்றங்களுக்கும் தயாராய் இருக்கும். பல்வேறு சமையல் முறைகளுக்கு இடையில் ஒரு சமநிலையை நீங்கள் எப்பொழுதும் தக்க வைக்க வேண்டும்.

Post Top Ad