அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 23, 2018

அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்


தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக தேர்வுத்துறை உருவானது. சென்னை, மதுரை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர் கீழ் செயல்பட்டன.

இதன் மூலம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உட்பட 40 வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்கல் பணிகளில் இத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு மாவட்ட அலுவலகங்கள் துவங்கப்படுகின்றன. 

இதற்காக புதிதாக உதவி இயக்குனர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்.,1 முதல் 32 மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்கள் செயல்பட சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது,' என்றார். மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆர்.எம்.எஸ்., ரோட்டில் செயல்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகமாக செயல்படும்.

Post Top Ad