JIO-சுதந்திர தின விழா சிறப்புச் சலுகைகள் என்ன தெரியுமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 14, 2018

JIO-சுதந்திர தின விழா சிறப்புச் சலுகைகள் என்ன தெரியுமா?


துறையில் ஒவ்வொரு நாளும் புதிய
புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வரும் ஜியோ, இண்டர்நெட் தொலைக்காட்சி சேவைகளுடன் அதி விரைவு அகன்ற அலைவரிசைகளை மாதம் 500 ரூபாய் கட்டணத்தில் வழங்க முடிவு செய்துள்ளது.
சுதந்திர தின விழா சிறப்புச் சலுகைகளை அறிவித்த முகேஷ் அம்பானியின் ஜியோ, தீபாவளித் திருநாளில் வெகுஜன மக்களின் வீடுகளில் மகிழ்ச்சி பட்டாசுகளைக் கொளுத்திப் போட தயாராகி விட்டது. இதனால் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது.
ஜிகோ பைபர் சேவை
இந்த ஆண்டுத் தீபாவளித் திருநாள் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்குள் ஜிகா பைபர் என்ற சேவையை வணிக ரீதியில் நடைமுறைப்படுத்த முடிவு செய்து விட்டது. நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் முதல், இரண்டாம் தர நகரங்களைக் குறி வைத்துள்ளது. 80 இடங்களில் இந்தச் சேவையைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் முன்பதிவு ஆகஸ்டு 15 ஆம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
  
அகன்ற அலைவரிசையில் சலுகை
தற்போது 100 வேகத்துடன் 100 ஜி.பி டேட்டாக்களைக் கொண்ட அகன்ற அலைவரிசை சலுகைப் பொதிகளைக் கம்பிவட இயக்குநர்கள் வழங்கி வருகிறார்கள். இதற்கு 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையிலும் வசூலிக்கும் அவர்கள், தொலைக்காட்சி சேவைகளுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதே அளவு சலுகைகளுடன் 50 விழுக்காடு தள்ளுபடிகளை வழங்க ஜியோ முடிவு செய்துள்ளது.
  
பாதிப்பு இல்லை
4 ஜி மொபைல் டேட்டாவுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட, வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை சேவைகளுக்கான கட்டணம் 20 முதல் 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4 ஜி மொபைல் சேவைகளுக்கான வணிகத்தைப் பாதிக்காது என்று தொலைத் தொடர்புதுறை திறனாய்வாளர் நவீன் குல்கர்னி கூறினார்.
  
வித்தியாசப்படுத்தும் ஜியோ
மொபைல் 4 ஜிக்கு வழங்கும் டேட்டாவும், வீடுகளுக்கான அகன்ற அலைவரிசையும் பயன்பாட்டில் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 4 ஜி மொபைல் டேட்டாவை விடப் பைபர் அடிப்படையிலான அகன்ற அலைவரிசை நம்பகமானதாக இருக்கும் என்பது குல்கர்னியின் கருத்தாக உள்ளது.
  
நெருக்கடியில் போட்டியாளர்கள்
தொலைத் தொடர்பு துறையில் இதுபோன்ற அறிவிப்புகள் ஜியோவை வேறுபடுத்திக் காட்டுவதாகவும், மற்ற போட்டியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஹெடல் காந்தி என்ற வல்லுநர் தெரிவித்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் பலன் பெற வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
  
ஒரு சின்ன யோசனை
இண்டர்நெட் அடிப்படையிலான தொலைக்காட்சி சேவைகளை ஐ.பி மல்டி கேஸ்டிங் தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்த ஜியோ திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.தொலைக்காட்சி சேவைகளுக்கு மட்டும் 500 முதல் 600 ஜி.பி வழங்க வேண்டும் என்றும், இதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எச்.எஸ்.பி.சியின் நிர்வாகி சர்மா யோசனை கூறியுள்ளார்

Post Top Ad