விலை உயர்ந்த போன்கள் இனி வாடகைக்கு கிடைக்கும்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 14, 2018

விலை உயர்ந்த போன்கள் இனி வாடகைக்கு கிடைக்கும்!


ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் அல்லது சாம்சங கேலக்ஸி எஸ்9+ வாங்க வேண்டும் என்று கனவு இருக்கும்.


இப்படிகனவு படைத்தவர்களுக்கு ரெண்ட்மோஜோ எனும் வீட்டிற்குத் தேவையான சோஃபா, பைக் போன்றவற்றை வாடகைக்கு அளிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமானது தற்போது புதிய சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் கீழ் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்9+ போன்றவற்றையும் குத்தகைக்கு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் வாடகை சேவை
ரெண்ட்மோஜோ நிறுவனம் ஸ்மார்ட்போன் வாடகை சேவையின் கீழ் 2,099 முதல் 9,299 ரூபாய்க்குள் ஆப்பிள், கூகுள், சாம்சங் நிறுவனங்களின் விலை உயர்ந்த போன்களை 6,12, 18 மற்றும் 24 மாத தவணைகளில் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு அளிக்க உள்ளது. ஐபோன் என்ஸ் 4,299 ரூபாய்க்குக் கிடைக்குமாம்.
  

எங்கு எல்லாம் இந்த வாடகை சேவை கிடைக்கும்?


பெங்களூரு, டெல்லி, குர்கான், மும்பை மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் வாடகை சேவை துவங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் கிடைக்கும் என்று அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களிடமும் இந்த வாடகை சேவை குறித்து விவாதித்து வருவதாகவும் கீதேன்ஷ் பமானியா தெரிவித்தார்.

  
சிறப்பு

இந்த வாடகை சேவையின் கீழ் ஸ்மார்ட்போன் பயனாளிகள் எளிதாகத் தங்கள் போன்களைக் குறைந்த கட்டணத்தில் புதுப்பித்துக்கொள்ளும் சேவையும் வழங்க உள்ளது. மேலும் தேவைப்பட்டால் அந்தப் போனை கூடுதல் கட்டணம் செலுத்தி செந்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
  

வாடிக்கையாளர்கள்
புதிய சேவையின் கீழ் பல புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று ரெண்ட்மோஜோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கீதேன்ஷ் பமானியா தெரிவித்துள்ளார். மேலும் மாத வாடகை தவணையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
  
முதலீடுகள்


ரெண்ட்மோஜோ நிறுவனமானது அக்செல் பார்ட்னர்ஸ், ஐடிஜி வெஞ்சர்ஸ், பெயின் கேப்பிட்டல் மற்றும் ரெனாவுட் லாப்லேஞ்ச் உள்ளிட்டவர்களிடம் இருந்து 17 மில்லியன் டாலரினை முதலீடாகப் பெற்றுள்ளது.

Post Top Ad