+2 துணை தேர்வு,தனி தேர்வர்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, August 27, 2018

+2 துணை தேர்வு,தனி தேர்வர்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்




தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று
முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.பிளஸ் 2 தேர்ச்சிக்கான
இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்., 4 வரை நடைபெற
உள்ளது.தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும்
விபரம், www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு, வரும், 1ம் தேதி வரை, தேர்வுத் துறை
சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
தவறும் விண்ணப்பதாரர்கள், 'தட்கல்' முறையில்,
செப்., 3, 4 ல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும்,
தலா, 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்த நிலையில்,
 இந்த ஆண்டு முதல், தலா, 100 மதிப்பெண்களுக்கு
புதிய முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.எனவே,
 பழைய முறையில், 2017 வரை பிளஸ் 2 தேர்வு எழுதி,
தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள
துணை தேர்விலும், அடுத்த ஆண்டு, மார்ச்சில் நடக்கும்,
பொது தேர்வுகளிலும் மட்டுமே பங்கேற்கலாம்.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்படும், பிளஸ் 2
தேர்வை எழுத வேண்டும் என்றால், 10ம் வகுப்பு முடித்து,
பிளஸ் 1 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என,
நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வில்,
தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து
பங்கேற்காதவர்களுக்கு, ஜூனில் துணை தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில்,
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன.தேர்வர்கள், scan.tndge.in என்ற
இணையதளத்தில், இன்று பிற்பகலில் முடிவுகளை தெரிந்து
கொள்ளலாம். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவு
எண் மட்டும் வெளியிடப்படும். எண் இல்லாதவர்களுக்கு,
மதிப்பெண் மாற்றம் இல்லை என, கருத வேண்டும்.தேர்வர்கள்
தங்களின் திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை,
http://www.dge.tn.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம். அசல் மதிப்பெண் வழங்கும் தேதி பின்
அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர்,
வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Post Top Ad