கடந்த 28ஆம் தேதி முதல் கருணாநிதி இறப்பு வரை காவேரி மருத்துவமனையில்... இதுவரை நடந்தது என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 7, 2018

கடந்த 28ஆம் தேதி முதல் கருணாநிதி இறப்பு வரை காவேரி மருத்துவமனையில்... இதுவரை நடந்தது என்ன?




கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு - மருத்துவமனை அறிக்கை.
சென்னை: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூலை 27ஆம் தேதி - ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 27ஆம் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி.
ஜூலை 28ஆம் தேதி-திரைத்துறையினர் அரசியல் கட்சியினர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 29ஆம் தேதி - கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்தது. ஏராளமான போலீசார் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். தொண்டர்களும் முழக்கமிட்டப்படி மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
ஜூலை 30 ஆம் தேதி- அதிகாலை காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
ஜூலை 30ஆம் தேதி - காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை ஐசியூவில் நேரடியாக பார்த்தனர்.
ஜூலை 31ஆம் தேதி - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம், கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
ஜூலை 31ஆம் தேதி -டேராடூனில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர், மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
ஆகஸ்டு 1ஆம் தேதி - கருணநிதி உடல்நிலை சீராக உள்ளது. திமுக தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என ஸ்டாலின் அறிக்கை. நடிகர் விஜய் காவேரி மருத்துவமனையில் நலம் விசாரித்தார்.
ஆகஸ்டு 2 ஆம் தேதி- திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதால் தொண்டர்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்தார்.
ஆகஸ்டு 2 ஆம் தேதி- திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.
ஆகஸ்டு 4ஆம் தேதி - காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆகஸ்டு 5 -காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் நேரில் விசாரித்தார்.
ஆகஸ்டு 6 - காலை முதல் கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்டு 7 - இன்று மாலை 6.10 மணியளவில் அவர் இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Post Top Ad