வரலாற்றில் இன்று 21.08.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 21, 2018

வரலாற்றில் இன்று 21.08.2018


ஆகஸ்டு 21 (August 21) கிரிகோரியன் ஆண்டின் 233 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1770 – கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1831 – கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.
1842 – டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
1911 – லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
1920 – சேர் ஏ. கனகசபை இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.
1959 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
1968 – சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.
1969 – ஆஸ்திரேலியனான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவன் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தான்.
1983 – பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
1986 – கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1567 – பிரான்சிசு டி சேலசு, சுவிட்சர்லாந்துப் புனிதர் (இ. 1622)
1765 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (இ. 1837)
1907 – ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவுடமைவாதி (இ. 1963)
1917 – லியோனிடு ஹுர்விக்ஸ், உருசியப் பொருளியலாளர், கணிதவியலாளர் (இ. 2008)
1961 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1963 – மொரோக்கோவின் ஆறாம் முகம்மது
1973 – சேர்ஜி பிரின், கூகுள் நிறுவனர்
1978 – பூமிகா சாவ்லா, இந்திய நடிகை
1984 – நியல் டெக்ஸ்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1984 – பருன் சொப்டி, இந்திய நடிகர்
1985 – மேலீசா, பிரெஞ்சுப் பாடகி
1986 – உசேன் போல்ட், ஜமைக்கா ஓட்டவீரர்

இறப்புகள்

1940 – லியோன் திரொட்ஸ்கி, உருசியப் புரட்சியாளர் செஞ்சேனையைத் தோற்றுவித்தவர் (பி. 1879)
1995 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1910)
2004 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரியக் கவிஞர் (பி. 1916)
2006 – பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1916)

Post Top Ad