வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா சேவை தொடக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 29, 2018

வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா சேவை தொடக்கம்


ஒரு நேரத்தில் கரண்ட் பில், டெலிபோன் பில் உட்பட பலவற்றுக்கும்மணிகணக்கில் க்யூவில் நிற்கும் நிலை. ஆனால் இப்போது அப்படியா விநாடி நேரத்தில் கட்டி முடித்துவிடுகிறோம்.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே. அந்தளவிற்கு டிஜிட்டல் டெக்னாலஜி உயர்ந்து நிற்கிறது.அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இதில் வங்கி மற்றும் பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயம் ஆகி வருகிறது. இதனால் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா தன் சேவையை வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் துவங்குகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சேவைகள் தொடர்பான விளக்கம் தருதல். அனைவரையும் டிஜிட்டல் சேவைக்கு ஊக்குவித்தல்மற்றும் நடைமுறைபடுத்தல்.இது போன்ற சேவைகள் மூலம் அதிக பயனாளிகள் டிஜிட்டல் முறைகளை பின்பற்ற ஒரு வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை மக்கள் மத்தியில்மிகுந்த வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒற்றை வரியில் சொல்வதானால் நாட்டை டிஜிட்டல் மயமாக்கி அதில் பொதுமக்கள் பயன் பெறும் வழிமுறைகள் நடந்து வருகிறது அந்த வகையில் டிஜிட்டல் பேங்க் இந்தியாவின் சேவை நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பது நிதர்சனமான உண்மை

Post Top Ad