வரலாற்றில் இன்று 16.08.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 16, 2018

வரலாற்றில் இன்று 16.08.2018


ஆகஸ்டு 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை வென்றான்.
1780 – தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகாளை வென்றனர்.
1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1865 – 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
1868 – பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
1945 – சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
1964 – தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.
1987 – அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2005 – வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1821 – ஆர்தர் கெய்லி, கணிதவியலர் (இ. 1895)
1872 – அ. மாதவையா, தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925)
1928 – ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (இ. 2015)
1933 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2008)

இறப்புகள்

1705 – ஜேக்கப் பெர்னூலி, சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், அறிவியலாளர் (பி. 1654)
1886 – ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், (பி. 1836)
1971 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், (பி. 1906)
1977 – எல்விஸ் பிறீஸ்லி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1935)
2003 – இடி அமீன், உகாண்டா சர்வாதிகாரி (பி. 1924)

சிறப்பு நாள்

பராகுவே – சிறுவர் நாள்

Post Top Ad