1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு சீருடை மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 15, 2018

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு சீருடை மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


அடுத்த மாதத்திற்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

14417 என்ற உதவி எண் மூலமாக மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

பிளஸ்-டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11, 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 முதல் 5 வரை , 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை மாற்றப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேல்நிலைப் பள்ளிகளை கணினி மயமாக்க ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். 


ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கையை குறைத்தது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் விரைவில் பேச உள்ளேன் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். 

மீண்டும் பழைய எண்ணிக்கைப்படியே தமிழகத்துக்கு விருதுகள் வழங்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆள்பாதி, ஆடைபாதி என்ற அடிப்படையில் சீருடை மாற்றப்படுகிறது என அவர் கூறியுள்ளார். வழக்குகள் காரணமாக தான் சென்ற ஆண்டு லேப்டாப் வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Post Top Ad